வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது.
பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது.
வெங்காயத்தில் வைட்டமின் சி சத்து மிகவும் அதிகமாக உண்டு. குறிப்பாக பச்சை வெங்காயத்தில் சி சத்து அதிகமாக உண்டு.
பெரும்பாலும் வெங்காயத்தை பச்சையாக உண்ணுவதன் மூலமே அதிலுள்ள சத்துக்களை முழுமையாகப் பெற முடியும்.
அந்தவகையில் வெங்காயத்தினை பச்சையாக சாப்பிட்டால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்ப்போம்.
- வெங்காயத்தை பச்சையாகச் சாப்பிட்டால் லேசாக வாய் துர்நாற்றம் வீசும் என்று சங்கடப்படுவதுண்டு. அதைப் பார்த்தால் உடல் ஆரோக்கியம் கிடைக்காது. சாப்பிட்டுவிட்டு சில புதினா இலைகளை வாயில் போட்டு மெல்லுங்கள். துர்நாற்றம் ஓடிவிடும்.
- நெஞ்சுவலி பிரச்சினை இருக்கிறவர்கள் தினமும் வெங்காயத்தைப் பச்சையாகச் சாப்பிட்டு வந்தால் இரத்தம் உறையும் பிரச்சினை சரியாகும். இதய நோய் உள்ளவர்களுக்கு மிகச்சிறந்த மருந்தாகவும் உணவாகவும் வெங்காயம் இருக்கும்.
- புகைப் பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் தினமும் அரை டீஸ்பூன் வெங்காயம் சாறினை காலை, மதியம், மாலை, இரவு என நான்கு வேளை சாப்பிட்டு வந்தால் நுரையீரல் பலம் பெறும்.
- வெங்காயத்தை தினமும் சாப்பிட்டு வாந்தால் இருமல், இரத்த வாந்தி, ஜலதோசம் மற்றும் சளி போன்ற பிரச்சினைகள் குணமாகும். இதன்மூலம் நுரையீரலில் உள்ள அழுக்குகள் மற்றும் கழிவுகள் வெளியேறும்.
- ஜலதோசம், இருமல், காய்ச்சல், நெஞ்சி சளி போன்ற பிரச்சனை குணமாக வெங்காய சாறுடன் சம அளவு தேன் கலந்து சாப்பிட வேண்டும். இவ்வாறு சாப்பிடுவதால் குளிர்காலத்தில் ஏற்படும் இருமல், சளி பிரச்சனைகள் குணமாகும். குழந்தைகளுக்கும் இதைக் கொடுக்கலாம்.
- காலரா நோயை குணப்படுத்த 5 சின்ன வெங்காயம் மற்றும் 10 மிளகு ஆகியவற்றை நன்றாக இடித்து அதனுடன் நாட்டுச் சர்க்கரை கலந்து கொடுக்க வேண்டும். இதை காலை, மாலை என இரண்டு வேளையும் கொடுத்து வர காலரா நோய் குணமாகும்.
- இரத்த மூலம் போன்ற கடுமையான மூல நோய்களும் குணமாக 50 கிராம் வெங்காயத்தை சாறெடுத்து தண்ணீர் சேர்த்து அதனுடன் சர்க்கரை சேர்த்து அருந்த வேண்டும். இந்த முறை தினமும் இரண்டு வேளை என்று பத்து அல்லது பதினைந்து நாட்கள் குடித்து வந்தால் இரத்த மூலம் குணமாகும். சின்ன வெங்காயம் பயன்படுத்துவது கூடுதல் பயனைத் தரும்.
- பல்வலி உள்ளவர்கள் வெங்காயத்தை ஒரு துண்டு எடுத்து பல்வலி உள்ள இடத்தில் வைத்தால் பல்வலி குணமாகும். குறிப்பாக, இரவு துங்கும்போது வைத்துக் கொண்டு படுத்தால் இடைஞ்சல் இல்லாமல் நீண்ட நேரம் வைத்திருக்க முடியும். தொடர்ந்து சொத்தைப் பல் உள்ள இடத்தில் இதை செய்து வந்தால், சொத்தைப் பல்லுக்குள் இருக்கும் புழுக்கள் கூட வெளியேறிவிடும்.
0 Comments