கொத்மலை,எட்டபாகய பகுதி மகாவலி ஆத்தில் நீராடச் சென்ற உடுநுவர,படுபிடிய சேர்ந்த இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் 9)நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
ஆத்தில் நீராடுவதற்காக படுபிடியில் இருந்து 7 இளைஞர்கள் நேற்று முற்பகல் கொத்மலை பகுதிக்கு சென்றுள்ளனர்;இதில் மொஹமட் இக்ரம்(23),மொஹமட் முஃப்தி(20) ஆகிய இரு இளைஞர்கள் நீராடும் போது மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த இருவர்களினதும் சடலங்கள் மீட்கப்பட்டு பரிசோதனைக்காக கம்பளை வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.
மேலும் இவ் இரு இளைஞர்களும் ஊரின் நலன் சமூகப் சேவைகளின் போது அயராது முன்னின்று உழைத்து உதவுவதாக ஊர் மக்கள் இதன்போது தெரிவித்ததா எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.
இவ் இருவரினதும் மரண சம்பவம் அறிந்து வியப்படைந்த நிலையில் முழு ஊரும் இன்றை தினம் சோகத்தில் ஆழ்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
யா அல்லாஹ்!
இவ் இருவரினதும் இவ் உலக வாழ்வை பொருந்தி,அனைத்து பாவங்களையும் மன்னித்து "ஜன்னத்துல் பிர்தவ்ஸ்" எனும் மேலான சுவர்க்கத்தை வழங்குவாயாக! அமீன்!
-Fastnews1stமுதல்வேகச்செய்தி-
0 Comments