Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

மத்ரஸாக்களில் பயங்கரவாதம் போதனை: ஞானசார தேரர் அரசுக்கு எச்சரிக்கை

bbsஇலங்கையிலுள்ள மத்ரஸாக்களில் பயங்கரவாதம் போதிக்கப்படுகிறது. இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுபலசேனா செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.கொழும்பில் புதனன்று இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டிலே அவர் இதனைத் தெரிவித்தார். இவர் இங்கு தொடர்ந்து கருத்து வெளியிடுகையில்;
முஸ்லிம் அடிப்படைவாதத்தின் கேந்திர நிலையங்களாக இலங்கையிலுள்ள மத்ரஸாக்கள் செயற்பட்டு வருகின்றன. இந்த மதரஸாக்கள் யாவும் தேசியக் கல்விக் கொள்கையின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும். இன்றேல் நிலைமை விபரீதமாகும். இப் பயங்கரவாதச் செயற்பாடுகள் இலங்கையில் பாரிய விளைவுகளைத் தோற்றுவித்துவிடும்.
பாகிஸ்தானிலே மத்ரஸாக்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. முஸ்லிம் அடிப்படைவாத பயங்கரவாத சக்திகள் இலங்கையில் அதனை விஸ்தரிக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர். இது மிகவும் ஆபத்தானதாகும். இது குறித்து அரசு அதிக அவதானம் செலுத்த வேண்டுமென்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் மத்ரஸாக்கள் எங்கும் நிறைந்துள்ளன. இம் மத்ரஸாக்களில் என்ன போதிக்கப்படுகின்றதென்பது பற்றி பெரும்பாலானோருக்கு தெரியாது. சிறு வயது முதலே முஸ்லிம் குழந்தைகளக்கு அடிப்படைவாத சிந்தனைகளை ஊட்டுகின்றனர். உள்ளத்தில் மோசமான எண்ணங்களை விதைக்கின்றனர். குழந்தைகளை ஆரம்பத்திலிருந்தே பயங்கரவாதிகளாக்கும் செயற்பாடுகளே மத்ரஸாக்களில் மேற்கொள்ளப்படுகின்றன.
அரசாங்கம் மத்ரஸாக்களின் செயற்பாடுகளை கண்காணிக்க வேண்டும். அங்கு போதிக்கப்படும் விடயங்களை ஆராய வேண்டும். விஷேட கவனம் செலுத்த வேண்டும். முன்பு பள்ளிவாயில்களில் மாத்திரமே மத்ரஸாக்கள் இயங்கி வந்தன. இப்போது எல்லா இடங்களுக்கும் வியாபித்து விட்டன. இதுகுறித்து அவதானம் செலுத்தப்பட வேண்டும்.
மத்ரஸாக்களில் பயங்கரவாதத்தினை ஊக்குவிக்கும் செயற்பாடுகளை அரசாங்கம் உடன் தடுத்து நிறுத்த வேண்டும். இன்றேல் விளைவுகள் பாரதூரமாகும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சில மத்ரஸாக்களை கட்டிணைப்பதற்கு பாராளுமன்றத்தில் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளதை பற்றியும் அவர் பிரஸ்தாபித்துள்ளார்.

Post a Comment

0 Comments