Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

ஈராக் குண்டு வெடிப்பில் 20 பேர் பலி

ஈராக் தலைநகர் பாக்தாதில் சன்னி பிரிவினரது மசூதியில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 20 பேர் உயிரிழந்தனர். 40 பேர் காயமடைந்தனர். பகுபாவின் அல்-வஜ்ஹியா நகரில் உள்ள மசூதியில் மதிய தொழுகைக்காக மக்கள் கூடியிருந்தபோது பயங்கரவாதிகள் இத்தாக்குதலை நடத்தியுள்ளனர். பகுபா நகரில் கடந்த சில தினங்களில் பயங்கரவாதிகள் இதேபோன்ற பல தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளனர். ஈராக்கில் சன்னி மற்றும் ஷியா என இரு பிரிவினரையும் குறி வைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதுபோன்ற தாக்குதல்களில் இதுவரை இந்த மாதத்தில் 457 பேரும், இந்த ஆண்டில் சுமார் 2,700 பேரும் கொல்லப்பட்டனர்.

StatCounter - Free Web Tracker and Counter

Post a Comment

0 Comments