Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

சூறா சபையை நிறுவ யூஸுப் கர்ளாவி நிதி, ஆலோசனை வழங்குகிறார்: ஞானசார தேரர்

ganasara deroஇலங்கையில் சூறா சபையை உருவாக்க அடிப்படைவாதிகளில் தீவிரம் மிக்கவரான யூஸுப் அல் கர்ளாவி நிதி மற்றும் ஆலோசனைகளை வழங்கி வருகிறார் என பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து இது பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில், அடிப்படைவாத செயற்பாடுகளை உலமா சபை முன்னெடுத்து வந்தது. தற்போது சூறா சபை ஊடாக முஸ்லிம் அடிப்படைவாதத்தினை வலுப்பெறச் செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கட்டாரில் உள்ள முஸ்லிம் அடிப்படைவாதிகளின் தீவிரம் மிக்கவரான யூஸுப் அல் கர்ளாவி சூறா சபை அமைப்பதற்கான ஆலோசனைகளை வழங்கி வருகிறார். அதன் பொருட்டு நிதியுதவியும் வழங்குகிறார். இலங்கையிலிருந்து சென்ற இவர் அண்மையில் இவரைச் சந்தித்துப் பேசியுள்ளனர். இவர்களுக்கெதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
உலமா சபையின் தோலைப் போர்த்திக் கொண்டு சூறா சபை செயற்பட ஆரம்பித்துள்ளது. முஸ்லிம் அடிப்படை வாதத்தினை பரப்புவதற்கான செயற்பாடுகளை இச் சபை முன்னெடுத்து வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்



Post a Comment

0 Comments