Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

'பறக்கும் மீன்கள்" திரைப்படத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்


 இலங்கை இனப்பிரச்சினையை மையப்படுத்தி தயாரிக்கப்பட்ட 'பியம்பனா மாலுவோ' (பறக்கும் மீன்கள்) என்ற திரைப்படத்திற்கு எதிராக கொழும்பில் இன்று புதன்கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு அவதூறை ஏற்படுத்தும் வகையில் இத் திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளதால் அதற்கு
தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது.

இந்நிலையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ள அதேவேளை, திரைப்படத்தை தயாரித்த சஞ்ஜீவ புஷ்பகுமாரவுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments