ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளராக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச அவர்களினால் கே.ஆர்.றிஸ்கான் முகம்மட் அவர்களுக்கு இன்று (08/03/2021) கட்சி தலைமையகத்தில் வைத்து குறித்த நியமனம் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர். ரஞ்சித் மத்தும பண்டார,ஐக்கிய இளைஞர் சக்தியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர்.மயந்த திஸாநாயக்க ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் இன் நியமனத்தின் மூலம் எதிர்காலத்தில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு பல்வேறு நலன் சார்ந்த திட்டங்கள் முன் எடுப்பது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரிடம் றிஸ்கான் முகம்மட் கலந்துரையாடினார்.
அத்துடன் இவர் முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் அவர்களின் அம்பாரை மாவட்ட இணைப்பாளராக கடமையாற்றிய காலத்தில் இளைஞர்களுக்கு பல்வேறு நலன்சார் திட்டங்களை முன்னெடுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-mn-pst-
0 Comments