நியூஸிலாந்தில் 7.3 ரிச்டெர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று சற்றுமுன்னர் ஏற்பட்டுள்ளதையடுத்து, சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக பசுபிக் சுனாமி எச்சரிக்கை நிலையம் (PTWC)தெரிவித்துள்ளது.
கிஸ்போர்ன் நகரிலிருந்து வடகிழக்கில் 180 கிலோமீட்டர் (111 மைல்) தொலைவில் இந்த நிலநடுக்கம் நியூஸிலாந்து நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை 2:27 மணிக்கு (13.27 Thursday GMT), 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
இதனால் நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து 300 கி.மீ தூரத்திற்குள் சுனாமி அலைகள் தாக்கக் கூடும் என்று பசுபிக் சுனாமி எச்சரிக்கை நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால் குறித்த பகுதியில் உள்ளவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நியூசிலாந்து ரிங் ஆஃப் ஃபயர் என அழைக்கப்படும் நில அதிர்வு செயலில் உள்ள மண்டலத்தில் அமைந்துள்ளமையினால் தொடர்ந்து சக்திவாய்ந்த நிலநடுக்கங்களினால் பாதிக்கப்படுகிறது.
0 Comments