இம்முறை ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் அனைவரும் கோவிட் தடுப்பூசியை கட்டாயம் ஏற்றியிருக்க வேண்டும் என சவுதி அரேபியா அறிவித்துள்ளது.
கோவிட் தடுப்பூசி ஏற்றியவர்கள் மாத்திரமே இம்முறை ஹஜ் யாத்திரையில் கலந்துகொள்ள முடியுமென சவுதி அரேபிய சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
மக்கா மற்றும் மதீனாவில் சுகாதார வசதிகளை ஏற்படுத்துவதற்கான ஆளணியை நியமிக்க அரசாங்கம் தயாராக வேண்டுமென சவுதி சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த வசதிகள் நுழைவாயில்களில் ஏற்படுத்தப்படும் எனவும், இதற்கு மேலதிகமாக தடுப்பூசிக்குழு அமைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக, வௌிநாடுகளில் இருந்து வருபவர்கள் ஹஜ் யாத்திரையில் கலந்துகொள்வதற்கு கடந்த வருடம் அனுமதி மறுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .
0 Comments