முஸ்லிம்களின் இறுதி துணியான வெள்ளை கபன்
துணியை கம்பத்தில் கட்டி இந்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.இப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் ஆசிரியர்,முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஹிதாயத் சத்தார் மற்றும் உடுநுவர பிரதேச சபை உப தலைவர் சப்பான் ஹாஜியார் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது பாராளுமனற உறுப்பினர் வேலுக்குமார் ஆசிரியர் இவ்வாறு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
அரசு தொடர்ந்தும் முஸ்லிம் மக்கள் மீது அரசியல் பழிவாங்கலை செய்து கொண்டிருக்கிறது.
இந்த நாட்டில் சட்டம்,ஒழுங்கு கேள்விக்குறியாகியுள்ளது.
நீதித்துறையை வைத்துக் கொண்டு அரசியல் நடத்துகின்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இறந்த ஒரு மனிதனின் இறுதிக்கிரிகைகளை கூட செய்ய தடைவிதித்து முஸ்லிம் மக்களை பழிவாங்கும் செயல்பாட்டை இந்த அரசு செய்து கொண்டு வருகிறது.
இலங்கையில் மாத்திரம் அல்ல உலக நாடுகளிலும் இன்று இந்த அரசின் இந்த அராஜக செயல்பாட்டை கண்டித்து மக்கள் கிளர்ந்து எழுந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
----
தொடர்ந்து ஹிதாயத் சத்தார் அவர்கள் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
படைத்த இறைவனுக்கு பொறுக்க முடியாதவகையில் இந்த நாட்டிலே இந்த அரசு ஆட்சி செய்து கொண்டிருக்கிறது.
நேற்று உயர் நீதிமன்றம் பற்றியெரிவதை நாம் கண்டோம்!.
இந்த நாட்டிலே சுதந்திர போராட்டத்துக்கு முஸ்லிம்கள் சிறுபான்மையினர்,பெருபான்மையுடன் சமமாக பங்குவகித்துள்ளனர்,எனவே எங்களுடைய சுதந்திரத்தை,உரிமைகளை இந்த அரசினால் பெற்றுக் கொடுக்க வேண்டும்!.
கொரோனாவால் உயிரிழந்த ஒருவரின் உடலை அடக்கவும்,எரிக்கவும் முடியும் என உலக சுகாதார மையத்தினால் சுகாதார வழிகாட்டலோடு தெளிவாக தெரிவிக்கப்பட்டிருக்கும் போது,அதனை 194 நாடுகள் பின்பற்றப்பட்டு வருகின்ற நிலையில்,
இங்கு மாத்திரம் இனவாதிகளை மகிழ்ச்சி படுத்துவதற்கு நமது ஜனாஸாக்களை எரிக்கப்பட்டுக் கொண்டிருப்பதை நாம் காண்கிறோம்!..
இது எமது சமூகத்துக்கு பெரும் மனவேதனையை கொடுக்கிறது!..
எங்களில் ஒருவர் மரணித்துவிட்டால் அவர்க்கு செய்ய வேண்டிய நான்கு முக்கிய விடயங்களில் ஒன்றுதான் அடக்கம் செய்வதும்,அது எமது சமூகத்தின் முக்கிய பொறுப்பும் உரிமையாகும்!.
எனவே இந்த அரசு முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்யக் கொடுக்காமல் பலவந்தமாக தகனம் செய்து வருவதை நாம் பார்க்கிறோம்.
அரசின் இந்த அராஜக செயலுக்கு கொழும்பு,அக்குறணை உட்பட நாட்டில் அனைத்து பகுதிகளிலும் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில்,
ஏனைய உலக நாடுகள் பலவற்றிலும் இதற்கான எதிர்ப்புகள்,கண்டங்கள் தெரிவிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
-----
தொடர்ந்து சப்பான் ஹாஜியார் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
அரசு செய்யும் இந்த அராஜக செயலை கண்டித்து வெள்ளை துணியை கட்டி அனைவரும் உங்களது எதிப்பை வெளிக்காட்ட வேண்டும்!.
எங்களது ஜனாஸாக்களை மாலைதீவுக்கு அனுப்பி அடக்கம் செய்ய வேண்டிய தேவையில்லை..
நாம் இந்த நாட்டில்,இந்த மண்ணில் பிறந்தவர்கள் எங்கள்து ஜனாசாக்களை இங்குதான் அடக்கம் செய்யவேண்டும்!.
எமது உரிமைகளை விட்டுக்கொடுக்க முடியாது என அவர் தெரிவித்தார்.
-Fastnews1stமுதல்வேகச்செய்தி-
0 Comments