Header Ads Widget

News Line

உடுநுவரையின் உப தலைவர் முஹம்மத் சபான் அவர்களுக்கு"தேசபந்து" விருது வழங்கி கௌரவிப்பு!.

2020 ஆம் ஆண்டுக்கான தர்ம சக்தி மற்றும் ஐக்கிய ஒத்துழைப்பு அமைப்பின் சமைய நல்லிணக்கத்துக்கான"தேசபந்து"கௌரவ விருதை உடுநுவர பிரதேச சபை உப தலைவர் சபான் அவர்கள் பெற்றுக்கொண்டுள்ளார்.

இவ் விசேட நிகழ்வு"தேசிய ஒற்றுமை"எனும் தொனிப்பொருளில் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க,பியசேன கமகே மற்றும் சந்திம வீரக்கொடி ஆகியோரின் தலைமையின் கீழ் நேற்றைய தினம் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க நினைவு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

நீண்டகாலமாக இனம்,மதம் பாராது அரசியலின் ஊடக உடுநுவர மக்களுக்கு அளப்பெரும் சேவையாற்றி வரும் தவுலகள பிரதேசத்தை சேர்ந்த,தற்போதைய பிரதேச சபை  உபதலைவருமான முஹம்மத் சபான் அவர்களுக்கே இவ் விசேட கௌரவ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ் விசேட கௌரவ விருதை பெற்று பெருமை சேர்த்திருக்கும் உங்களுக்கு எமது Fastnews1stமுதல்வேகச்செய்தி சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்!.

-Fastnews1stமுதல்வேகச்செய்தி


https://fb.watch/39AG368Dh3/

Post a Comment

0 Comments