Header Ads Widget

News Line

வெளிவிவகார அமைச்சர் - பாக். உயர் ஸ்தானிகர் சந்திப்பு; புர்கா தடை குறித்தும் பேச்சு


புர்கா மற்றும் நிகாப் ஆகிவற்றுக்கு தடை விதிக்கப்படுவது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவுடன் இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர்  ஸாத் கட்டாக் பேச்சு நடத்தியுள்ளார்.

இலங்கையில் புர்கா மற்றும் நிகாப் போன்றவற்றுக்கு தடை விதிக்கப்படுவதற்கு இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர்  நேற்று (15) அதிருப்தி வெளியிட்டிருந்தார்.

இது தொடர்பில் அவர் டுவிட்டர் பதிவொன்றினையும் வெளியிட்டிருந்தார். புர்கா மற்றும் நிகாப் ஆகியவற்றுக்கு தடை விதிப்பதற்கு எதிராக இராஜதந்திரி மட்டத்தில் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் மாத்திரமே கருத்து வெளியிட்டிருந்தார்.

இது நேற்று (15) திங்கட்கிழமை ஊடகங்களில் பேசு பொருளாகக் காணப்பட்டது. இந்த நிலையிலேயே, வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவிற்கும்  இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகரிற்கும் இடையிலான முக்கிய பேச்சுவார்த்தையொன்று இன்று (16) செவ்வாய்க்க்கிழமை இடம்பெற்றுள்ளது. 

இதன்போது, புர்கா மற்றும் நிகாபிற்கு தடை விதிப்பது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அது மாத்திரமல்லாமல் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் அண்மைய இலங்கை விஜயத்தின் வெளிப்பாடாக மேற்கொள்ளப்படவுள்ள செயற்திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

-vdy-pst-

Post a Comment

0 Comments