கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்யலாம் என்று சுகாதார அமைச்சின் சுற்று நிருபத்துக்கமைய ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் இதுவரையில் 31 சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த மேலும் 7 பேருடைய ஜனாஸாக்கள் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இன்று நான்காவது நாளாகவும் கொரோனா ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டு வருகின்றது.
அதனடிப்படையில் இதுவரையில் 31 பேருடைய ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments