அண்மையில் டேவிட் சேகரின் திடீர் பதவி விலகளை அடுத்து இலங்கை கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணத்தை மேட்கொள்ள இருந்த நிலையில் அணிக்கு வேகப்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளராக சமிந்த வாஸ் நியமிக்கப்பட்டு இருந்தார்.
எனினும் அவர் இன்றைய தினம் தாம் அந்தபதவியில் இருந்து விலகுவதாக திடீர் என உத்தியோகபூர்வமாக அறிவித்தலை விடுத்திருந்தார்.
தாம் தாழ்மையான கோரிக்கை ஒன்றை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திடம் முன்வைத்ததாகவும் எனினும் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகவும், இதைத் தவிர வேறு எதையும் கூறமுடியாது என்றும் அவர் தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
“நீதி வெல்லும்” என்ற விடயத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இறுதி தருணத்தில் அவர் தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
கொடுப்பனவு சம்பந்தமாக எழுந்த பிரச்சினை காரணமாகவே சமிந்த வாஸ் விலகி இருப்பதாக சிறிலங்கா கிரிக்கட் நிறுவனம் தமது ஊடக அறிக்கையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments