கெலிஓய,கரமட பகுதியில் 27)நேற்று இரவு இடம்பெற்ற கோர வீதி விபத்தில் பாதசாரி ஒருவர் உட்பட மூன்று பேர்கள் உயிரிழந்துள்ளனர்.
இச் சம்பவம் பாதசாரி ஒருவர் எதிர்பாராது வேகமாக வீதியை கடக்க முயன்றபோது எதிரே வேகமாக வந்த மோட்டார் பைக் ஒன்றுக்கு மோதி பாதசாரி இஸ்தலத்தில் படுகாயமடைகிறார்.
அதே நேரம் குறித்த மோட்டார் பைக்கை பின்தொடர்ந்து வந்த முச்சக்கரவண்டி ஒன்று வேகக் கட்டுபாட்டையிழந்து இஸ்தலத்தில் விழுந்துகிடக்கும் பாதசாரி மீது மேல் ஏறி எதிர்புறம் இருந்து வரும் கார் ஒன்றுடன் மோதி முச்சக்கரவண்டி குடைசாய்க்கிறது.
இதன்போது குறித்த முச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்த வேலம்பொட பகுதியை சேர்ந்த தம்பதியினர் இருவரும் படுகாயம் அடைந்த நிலையில்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றனர்.
பின்னர் சிகிச்சை பயனின்றி படுகாயம் அடைந்த பாதசாரி உட்பட 3பேர்களும் இன்றையதினம் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையின் தகவல் தெரிவிக்கிறது.
குறித்த சம்பவத்தில் முச்சக்கர வண்டி சாரதி கைது செய்யப்பட்டு,மேலதிக விசாரணைகளை பேராதெனிய பொலிஸார் மேட்கொண்டு வருகின்றனர்.
0 Comments