Header Ads Widget

News Line

ஈராக்கில் தற்கொலை தாக்குதல் - எம்.பி.உள்ளிட்ட நால்வர் பலி

 ஈராக்கில் தற்கொலை தாக்குதல் - எம்.பி.உள்ளிட்ட நால்வர் பலி!ஈராக்கில் சன்னி, ஷியா முஸ்லிம்களிடையே மத சடங்குகள் நடத்துவதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரச்சினைகள் எழுந்து வருகிறன.
இதனால் ஒருவரை ஒருவர் அடிக்கடி தாக்கியும் வருகின்றனர். இந்தநிலையில், பலூசா நகரில் சன்னி பிரிவு முஸ்லிம் எம்.பி. ஈபான் சாதூன் அல்-இசாவியை வாழ்த்துவது போல் ஒருவர் அணுகிய ஒருவர், தனது வயிற்றில் கட்டியிருந்த வெடிப்பொருட்களை வெடிக்கச் செய்துள்ளார்.
இதில் எம்.பி. இசாவி மற்றும் அவரது பாதுகாவலர் என மொத்தம் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாயினர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.
எம்.பி. படுகொலைக்கு அன்பார் பகுதியில் மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அரசு நிர்வாகம் கூறியுள்ளது.

Post a Comment

0 Comments