கெய்ரோ: இராணுவத்தால் ஆட்சி கவிழ்க்கப்பட்ட முஹம்மது முர்சி வன்முறைகளைத் தூண்டியதற்கா கவும், அதில் ஈடுபட்டதற்காகவும் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கை சந்திப்பார் என்று அரசால் நடத்தப்படும் எகிப்து தொலைகாட்சி அறிவித்துள்ளது. வழக்கு விசாரணை எப்பொழுது ஆரம்பிக்கும் என்ற தகவலை அது
தெரிவிக்கவில்லை.
நேற்று (01.09.13) இரவு தொலைக்காசியில் பேசிய அரசுத் தரப்பு வழக்குரைஞர் ஹிஷாம் பரகத் இதனைத் தெரிவித்தார். “முர்சியும், 14 இக்வான் இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் கடந்த 2012 டிசம்பர் மாதம் வன்முறைகளைத் தூண்டியதற்காகவும், கொலைகளை நடத்தியதற்காகவும் இந்த வழக்கு விசாரணை நடைபெறும்” என்று அவர் தெரிவித்தார்.
0 Comments