Header Ads Widget

News Line

    Loading......

விஜித தேரர் மீது இனம் தெரியாத குழுவொன்று தாக்குதல்

மஹியங்கனை, மகாவலி ரஜமகா விகாரையின் விகாராதிபதியும் மஹியங்கனை பிரதேச சபை உறுப்பினருமான வடரேக விஜித தேரர் மீது இனம் தெரியாத குழுவொன்று தாக்குதல் நடத்தியுள்ளது.மஹியங்கணையிலிருந்து கொழும்பு நோக்கி வந்துகொண்டிருந்தபோது கெப், முச்சக்கரவண்டிகளில் வந்தவர்களால் பிலிமத்தலாவ பிரதேசத்தில் வைத்து இந்தத் தாக்குதல்
நடத்தப்பட்டுள்ளது.தாக்குதலில் காயமடைந்த வடரேக விஜித தேரர் தற்போது கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் கேசரிக்கு கருத்து வெளியிட்டார்.
18ஆவது வளைவிலிருந்து தன்னை தொடர்ந்து வந்த குழுவினர் பொது பல சேனாவைப் பற்றி தான் விமர்சித்ததாக கூறி தன்மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவித்தார்.அத்துடன் தாக்குதல் நடத்த வந்தவர்கள் கண்டி பொது பல சேனா கிளையின் தலைவருடன் வந்ததாகவும் தனது வாகனத்தையும் அவர்கள் சேதப்பட்டுத்தியதாகவும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் தாக்குதலை சுதாகரித்துக்கொண்டு கேகாலை பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்ததாகவும் அங்கு தாக்குதல் தொடர்பில் முறைப்பாடளித்த நிலையில் அமைச்சர்கள், பொலிஸ் மா அதிபர் உள்ளிட்டவர்களை தொடர்பு கொண்டு பொலிஸ் பாதுகாப்புடன் கொழும்பு வந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மஹியங்கனை பள்ளிவாசல் விவகாரம் முஸ்லிம்களை விமர்சிக்கும் பொதுபல சேனாவின் இனவாத கருத்துகளை தான் எதிர்த்ததாலேயே தன்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக கேகாலை பொலிஸ் நிலையத்தை கேசரி குறித்த சம்பவம் தொடர்பில் வினவியது.
இவ்வாறான தாக்குதல் இடம்பெற்றதை உறுதி செய்த கேகாலை பொலிஸார் அது பேராதெனிய பொலிஸ் பிரிவிலேயே அந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதால் பதிவு செய்யப்பட்ட முறைப்பாடு பேராதெனிய பொலிஸ் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments