நியூஸிலாந்தை அடிப்படையாகக் கொண்டியங்கும் பால்மா உற்பத்தி நிறுவனமான பொன்டெராவின் உயர்மட்ட நிறைவேற்றதிகாரியொருவர் புதன்கிழமை தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.மேற்படி நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்பட்ட பால்மாக்களில் டிசிடி என்ற இரசாயனம் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அந் நிறுவனத்தின் பெயருக்கு உலகளாவிய ரீதியில் அபகீர்த்திஏற்பட்டுள்ள நிலையிலேயே பொன்டெராவின் பால் உற்பத்திகளுக்கான முகாமைப் பணிப்பாளரான காரி ரமனோ பதவி விலகியுள்ளதாக மேற்படி நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள குறுகிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவரது பதவி விலகல் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ள பொன்டெரா, அவர் பதவிவிலகுவதற்கான காரணம் குறித்து எதுவித விமர்சனத்தையும் வெளியிடவில்லை.
‘‘காரி தனது பதவிக் காலத்தில் கணிசமான பங்களிப்பைச் செய்துள்ளார். பொன்டெரா அவரது தீர்மானத்துக்கு கெளரவமளிக்கிறது’ என பொன்டெராவின் தலைமை நிறைவேற்றதிகாரி தியோ ஸ்பியறிங்ஸ் தெரிவித்தார்.

0 Comments