Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

இந்தியாவினால் அன்பளிப்பு செய்யப்பட்ட தடுப்பூசிகள் இன்று இலங்கை வந்தடைந்தது

இந்திய அரசாங்கத்தினால் அன்பளிப்பு செய்யப்பட்ட  ஒக்ஸ்பேர்ட் எஸ்ட்ராசேனகா - கேவிஷீல்ட் ஊசி மருந்தை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கையளித்துள்ளார்.

இந்தியா அன்பளிப்பு செய்துள்ள  ஊசி மருந்துகள் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தன.

அதனை பெற்றுக் கொள்ள ஜனாதிபதி விமான நிலையத்திற்கு சென்றிருந்தார்.

ஊசி மருந்து தொகையை உத்தியோகபூர்வமாக பெற்றுக்கொண்ட பின்னர், அவற்றை குளிரூட்டி சாதனங்கள் அடங்கிய வாகனங்களில் ஏற்றப்பட்டு, சுகாதார அமைச்சிற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா வழங்கிய கொரோனா வைரஸ் தடுப்புக்கான இந்த ஊசி மருந்துகள் இன்று பிற்பகல் இலங்கையில் உள்ள 6 வைத்தியசாலைகளுக்கு விநியோகிக்கப்படவுள்ளதுடன் நாளைய தினம் அதனை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.




Post a Comment

0 Comments