Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

ஜனாஸாக்களை அடக்கம் செய்ய மறுக்கும் தேரர்களின் கருத்துக்களும்;உலமா சபையின் சந்தேகமும்!. (நேற்றைய பதிவுகளின் ஒரு விரிவு)

இலங்கையில் ஜனாஸா எரிப்பு விவகாரம் முழு உலகத்திலும் இன்று பேசும் பொருளாக  மாறியிருக்கிறது.ஜனாஸாக்களை தொடர்ந்து  எரிக்கும்  செயலை கண்டித்து பல எதிர்ப்புகள் கண்டனங்கள்,அழுத்தங்கள் இந்த அரசுக்கு தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது.

பெரும் நெருக்கடிக்குள் இந்த அரசு சிக்கிக் கொண்டுள்ளது.

இருந்தும் "தீயை அணைக்க முயல்வதுபோல் தீக்கு எண்ணையை ஊற்றும் செயல்தான்" கவலையளிக்கிறது.

இன்றையதினம் மீண்டும் ஜனாஸாக்களை அடக்குவது?,எரிப்பதா? என்ற பிரச்சினைக்கு இறுதி முடிவுக்கான 30 பேர்கள் கொண்டு குழு ஒன்று ஜனாதிபதியால் இன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கிறது.

எவ்வாறாயினும் கொரோனா உடல்களை  அடக்கம் செய்யவும் அனுமதிக்குமாறு வலியுறுத்தி அமரபுர மற்றும் ராமான்ய நிக்காய தேரர்கள் இன்றைய தினம் ஜனாதிபதியிடம் கோரிக்கை ஒன்றை  விடுத்திருந்தனர்.

அது அவ்வாறு இருக்க 27)நேற்றைய தினம் பல இணைய தளங்களிலும்,பத்திரிக்ககைளிலும் பிரசுரிக்கப்பட்டு இருந்த ஒரு முக்கிய பதிவுதான் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய மறுக்கும் தேரர்களின் கருத்துக்களும்,உலமா சபையின் அறிக்கையில் வெளியான சந்தேகமும்!.

இவற்றை ஒரு முறை நாம் பார்ப்போம்!.

ஆனந்த தேரர்: 

கொரோனா வைரஸ் காரணமாக இறக்கும் நபர்களின் உடல்களை  தகனம் செய்வதா அல்லது அடக்கம் செய்வதா என்ற வாத விவாதங்கள் அவசியமற்றது.

ஒரு நாட்டுக்கு ஒரே சட்டம், ஒரே வேலைத்திட்டம் இருக்க வேண்டும். இதனால்,ஒவ்வாரு அரசாங்கங்கள் நடைமுறைப்படுத்தும் சட்டங்களை ஒவ்வொரு தரப்பினருக்கு தேவையான வகையில் மாற்றக்கூடாது.

அடக்கம் செய்வதற்கு எதிராக பிக்குமார் அமைதியான முறையில் குரல் கொடுப்போம்.

தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கி தூண்டி விட்டால் காட்டில் இருக்கும் புலியை தூண்டிவிட்டது போல் நேரிடக் கூடும் என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

******+******+*******+********+

குனவன்ச தேரர்:

தங்களது பொறுமையை கோழைத்தனமாக எடுத்துக்கொள்ள கூடாது! 

முஸ்லிம் ஒருவர் கொரோனாவினால் மரணித்தால் அடக்குவதா அல்லது எரிப்பதா  என்ற விடயத்தை பிரச்சினையாக்கி உள்ளனர். ஒரே நாடு ஒரே சட்டம் என்ற விடயத்தை நிலைநாட்டுவார்கள் என நாம் எதிர்பார்த்தோம்.

இந்த நாட்டில் பௌத்தர்கள்,இந்துகள்,கிருஷ்தவர்கள் கட்டுக்கோப்புடன் வாழ்கின்றனர்.

ஏன் ஒரு சாராருக்கு மாத்திரம் விஷேட சலுகை?.

இவ்வாறு இந்த நாட்டிற்குள்  செய்ய விடவேண்டாம்.

எமது பொறுமையை கோழைத்தனமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என எல்லே குனவன்ச தேரர் தெரிவித்துள்ளார்

*******+*******+*******+********

(உலமா சபையின் தள்ளாடும் அறிக்கை)

ஜனாஸாக்க‌ளை அட‌க்கும் அனும‌தி பெற‌ மிக‌ க‌வ‌ன‌மாக‌ காய்க‌ள் ந‌க‌ர்த்த‌ப்ப‌ட்ட‌ன‌.

எரிக்க‌லாம் என்ப‌தை பிர‌க‌ட‌ன‌ப்ப‌டுத்திய‌ ர‌ணில் ஆத‌ர‌வாள‌ர் அனில் ஜ‌ய‌சிங்க‌வை கூட‌ இந்த அர‌சு இட‌ம் மாற்றிய‌து.

தீவிர‌வாத‌ போக்குடைய பௌத்த மதகுருக்களின் காதுக‌ளுக்கு போகாம‌ல் தீர்க்கும் முய‌ற்சிக்கு பிர‌த‌ம‌ரும் ஒத்துழைத்தார்.

வெண்கொடி, மண்கொடிக்கெல்லாம் முன்பாக‌வே வ‌ர‌ண்ட‌ பிர‌தேச‌த்தில் அட‌க்க‌ம் செய்ய‌ ந‌ட‌வ‌டிக்கை எடுக்கும் ப‌டி பிர‌த‌ம‌ர் சுகாதார‌ குழுவை வேண்டியிருந்தார்.

ஜ‌னாஸாக்க‌ளை அட‌க்க‌ அனும‌தி கிடைத்தால் முஸ்லிம்க‌ள் அர‌சின் ப‌க்க‌ம் சாய்ந்து விடுவார்க‌ள் என‌ ப‌ய‌ந்த‌ ஜே.வி.பியும் சில‌ முஸ்லிம் குள்ள‌ ந‌ரிக‌ளும் சேர்ந்து வெண் கொடி க‌ட்டி குழ‌ப்பி விட்ட‌ன‌ர். சில‌ மொக்கைக‌ள் பேஸ் புக்கில் ச‌மூக‌த்தை உசுப்பேற்றின‌ர்.

இப்போது இது சிங்க‌ள‌ இனவாதிகளுக்கு ஒரு வாய்ப்பாக மாறிவிட்டது.

அடக்கம் செய்ய அனும‌தி கொடுத்தால் ஊரைக்கூட்டி ஒப்பாரி வைப்போம் என்கிறார்க‌ள்.

எல்லாவ‌ற்றிலும் உசார் ம‌டைய‌ர்க‌ளாகி வீழ்ந்து கிட‌க்கிற‌து முஸ்லிம் ச‌மூக‌ம்.

இனி அடுத்த‌ தேர்த‌ல் வ‌ரை எரிப்பு நிறுத்த‌ப்ப‌டுமா என்ப‌து ச‌ந்தேக‌ம் தான்! என உலமா கட்சியின் தலைவர் மௌலவி முபாரக் அப்துல் மஜீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

****

இந்த கருத்துக்கள் மக்களிடத்தி இன்று ஒரு அதிதிருப்தியான முடிவை கொடுத்திருக்கிறது.

நாம் இந்த மண்ணில் பிறந்து வளர்ந்தவர்கள்,எம்மை இங்குதான் அடக்கம் செய்யவேண்டும்;நம்மவரில்  ஒருவர் இறந்துவிட்டால் அவரை அடக்கம் செய்வது உயிரோடு இருக்கும் எமக்கு முக்கிய கடமையும் பொறுப்பும் ஆகும்.

நாம் என்ன கேற்றுகிறோம்!.

எமது கடைசி ஆசையான அடக்கம் செய்யும் உரிமையை கொரோனாவினால் மரணிக்கும் உடல்களும் வழங்குமாறு கேற்றுகிறோம்.

இதுவரையில் எந்த பிரச்சினையும் இன்றி அமைதியான முறையில் நம்பிக்கையோடு உரிமைகளை கேட்டு போராடினோம்,ஜனாஸாவை எரிக்காதே எனக்கோரி வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம்!

இறந்த ஒரு உடலில் இருந்து வைரஸ் பரவுவதற்கான எந்த ஆதாரமும் இல்லை 

என விசேட விஞ்ஞானிகள்,தொற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

உலக சுகாதார மையத்தினால் இறந்த ஒருவரின் உடலை அவரது உறவினர்களின் விருப்பத்துக்கு ஏற்றவாறு அடக்கவும் எரிக்கவும் முடியும் என தெளிவாக தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில்,இங்கு இன்னும் கட்டாய தகனம் செய்ய மாத்திரமே அனுமதியளித்திருப்பது கவலையளிக்கிறது.

இந்த அரசின் பலவந்த எரிப்புக்கு எதிராக உலக இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் உலக தமிழ் பேரவை உட்பட எதிர்க்கட்சியில் இருக்கும் அனைத்து  உறுப்பினர்களும் இதற்காக குரல் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

எனினும் அவை அனைத்தையும் திசை திருப்ப திட்டம் தீட்டிவருவதை நாம் அறிகிறோம்!

பொதுவாக உலக நாடுகள் பலவற்றில் குறிப்பாக பௌத்த நாடான மியான்மார்,நேபாள் போன்ற நாடுகளில் அடக்கம் செய்வதற்கு அனுமதியளித்து இன்றும் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.

இங்கு மாத்திரம் இன்னும் ஏன் அடக்கம் செய்ய அனுமதி கொடுக்கவில்லை?

கொரோனாவில் மரணித்தவர்களின்  எண்ணிக்கையை பார்த்தல் 

அதிகமானவர்கள் முஸ்லிம்களே இருக்கின்றனர்.

இதுவும் பெரும் கேள்விக் குறியாகத்தான் இருக்கிறது!??

உறவினர்களின் எந்த ஆலோசனையோ அனுமதியோ இன்றி முஸ்லிம்களின் உடல்களை பலவந்தமாக எரித்துள்ளனர்,எரித்துக் கொண்டிருக்கின்றனர்!?

20 நாள் பட்சிளம் குழந்தைக்கு என்னானது;மரணித்தது உண்மைதான்

கொரோன என பச்சை குத்தி கொளுத்தியதை மறக்க முடியுமா?

இதுவரையில் அடக்கும் விடையத்தில் முஸ்லிம்களுக்கு  ஒரு தீர்வை பெற்றுக்கொடுக்க முன்வராமல் இந்த அரசு பதுங்குகிறது,தேரர்களை வைத்து திசை திருப்ப முனையும் செயலால் நமது போராட்டங்கள் பயனளிக்குமா என்ற கேள்வி எழுகிறது?

எனவே நாம் இந்த விடையத்தில் பொறுமை கொண்டு தொடர்ந்து இறைவனிடமே கையேந்தி பிராத்திப்போம்!.

-முபீம் முபாரக் GMC-

Post a Comment

0 Comments