Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

3ஆவது தடவை முடியுமா? உயர்நீதிமன்றில் ஜனாதிபதி மஹிந்த கேள்வி

 1978ம் ஆண்டு அரசியல் யாப்பில் செய்யப்பட்ட 18ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் தனக்கு மூன்றாவது தடவை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல் இருக்கிறதா என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உயர் நீதிமன்றிடம் ஆலோசனை கோரியுள்ளார். எதிர்வரும் 10ம் திகதிக்கு முன்னர் தனக்கு தீர்ப்பினை அறிவிக்குமாறு ஜனாதிபதி கோரியுள்ளார். 


அதன்படி உயர்நீதிமன்ற பதிவாளர் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி ஜனாதிபதியின் கோரிக்கை தொடர்பில் 7ம் திகதி மாலை 3 மணிக்கு முன்னர் விளக்கக் கடிதம் அனுப்புமாறு கோரிக்கை விடுத்துள்ளார். 
பிரதம நீதியரசரின் ஆலோசனைக்கு அமைய நீதிமன்ற பதிவாளர் இக்கடிதத்தை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.

Post a Comment

0 Comments