Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

4 உறுப்பினர்கள் பதவியேற்க தடை

மாகாண சபை தேர்தலில் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களில் நான்கு பேர் சத்திய பிரமாணம் செய்ய முடியாது என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இன்று வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.
குறித்த நான்கு மாகாண சபை உறுப்பினர்களும் தங்களின் சொத்து விபரங்களை வெளிப்படுத்த தவறினர் என அவர் குறிப்பிட்டார்.இதனால்
இவர்களின் பெயர்கள் புதிய மாகாண சபை உறுப்பினர்களுக்கான வர்த்தமானியில் பிரசுரிக்கப்படவில்லை எனவும் தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்தார்.


இதன் காரணமாக இவர்கள் மாகாண சபை உறுப்பினர்களாக சத்திய பிரமாணம் செய்ய முடியாது என அவர் மேலும் குறிப்பிட்டார். எனினும் அவர்களின் பெயர்களை வெளியிட தேர்தல்கள் ஆணையாளர் மறுத்துவிட்டார்.

Post a Comment

0 Comments