தொடர்ந்து நிலவும் சீரற்ற காலநிலையால் உடுநுவர,படுபிடிய பிரதேசத்தில் நேற்றைய தினம் பாரிய மண் சரிவு ஒன்று ஏற்பட்டு பிரதான வீதிகளில் ஒன்றான மூங்கில் பந்துர வீதி ஊடக போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.
17)நேற்று பிற்பகல் இடம்பெற்ற இப் பாரிய மண்சரிவால் மூங்கில் பந்துர வீதியின் கீழ் புதிதாக புனர்நிர்மானிக்கப்படும் வீடு ஒன்றின் அடித்தள கட்டமைப்புகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும்,மேலும் வீதியின் ஊடக கனரக வாகனகளுக்கு இனிமேல் செல்ல முடியாத அபாய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதன்போது அந்த வீதியின் கீழ் வசிக்கும் சிலர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்திருந்தனர்.
மேலும் நேற்றைய தினம் குறித்த மண்சரிவின் போது வீட்டின் அடித்தளம் நிர்மாண பணியாளர்கள் யாரும் வேலையில் ஈடுபட்டிருக்கவில்லை என்பது முக்கியவிடயம் என அவர்கள் மேலும் தெரிவித்திருந்தனர்.
0 Comments