Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

மஹியங்கனையில் மஸ்ஜிதுல் அரபா மீது தாக்குதல்: பன்றி இறைச்சியும் வீச்சு


 


மஹியங்கனை நகரில் உள்ள முஸ்லிம்களின் வணக்கஸ்தலமான மஸ்ஜிதுல் அரபா மீது நேற்று இரவு இனந்தெரியாத நபர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.ரமழான் காலத்தில் முஸ்லிம்களின் இராக்கால வணக்கமான தராவிஹ் தொழுகை முடிந்த பிறகு சுமார் இரவு 11.10 மணியளவில் ஐந்து அல்லது ஆறு பேர் கொண்ட குழுவொன்று குறித்த மஹியங்கனை மஸ்ஜிதுல் அரபா மீது கல் வீசியுள்ளனர்.இதனால் பள்ளிவாயலின் நான்கு ஜன்னல் கண்ணாடிகளும், ஒரு கதவின் கண்ணாடியும்
சேதமாகியுள்ளதுடன் பள்ளியின் உற்பகுதிக்குள் பன்றி
இறைச்சியையும் வீசியுள்ளனர். பள்ளியின் கழிவறைப் பகுதியும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக மஹியங்கனை பொலிசில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் தற்பொழுது பொலிசார் பள்ளிவாயலில் காவல் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹியங்கனைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Post a Comment

0 Comments