Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

இன அடிப்படையில் நாட்டை பிரிக்க முடியாது - ஜும்மா பள்ளியை திறந்து மஹிந்த உரை

  இனங்களின் அடிப்படையில் நாட்டை பிரிக்க முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டில் எந்தவொரு இனத்திற்கும் மதத்திற்கும் தனிப்பட்ட இடமொன்று கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாழ்வதற்கு முக்கியம் பிரதேசம் அல்ல சுதந்தரம் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
புனரமைக்கப்பட்ட பேருவளை - சீனாவத்தை ஜும்மா பள்ளியை இன்று (05) திறந்து வைத்து உரையாற்றிய
போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டார். சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் பாதுகாப்புக்காக அரசாங்கம் எப்போதும் முன்நிற்பதாக அவர் கூறியுள்ளார்.
தாய் நாட்டை ஆதரிக்கும் ஒரே சகோதர மக்களாக அனைவரும் வாழ வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.இன அடிப்படையில் நாட்டை பிரிக்க முடியாது - முஸ்லிம் பள்ளியை திறந்து மஹிந்த உரை

Post a Comment

0 Comments