Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

ஹலால் சான்றிதழை பெற்றுக்கொள்ள யாரையும் நிர்ப்பந்திக்கவில்லை:ஹசன் அலி

 
எந்தவொரு பொருளுக்கும் எச்சந்தர்ப்பத்திலும் ஹலால் சான்றிதழைப் பெற்றுக்கொள்ள முஸ்லிம் மக்கள் யாரையும் அற்புறுத்தவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச்செயலாளர் எம்.ரி.ஹசன் அலி தெரிவித்துள்ளார். அதனால் அண்மைக்காலமாக ஹலால் சான்றிதழுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்கள் பொய்யானவை எனத் தெரிவித்த அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாவது  ஹலால் சான்றிதழ் கிடைப்பது இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு அமைய தயார் செய்யப்படும் பொருட்களுக்கு மட்டுமாகும். எங்கள் சமயத்தில் ஹலாலான  பொருட்களையே அனுபவிக்க முடியும். அதனாலேயே ஹலால் சான்றிதழ் உள்ள பொருட்களை நாங்கள் சந்தையில் கொள்வனவு செய்கிறோம் .
 
இந்த நாட்டின் அரசியல் யாப்புக்கு அமைவாக எமது சமயத்தை பூரணமாக கடைபிடிக்கும் உரிமை எமக்குள்ளது. அதனால் இது தொடர்பில் ஏனையவர்கள் புரிந்துணர்வுடன் மற்றைய பொருட்களுக்கும் ஹலால் சான்றிதழை பெற்றுக்கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார்.-VD-

Post a Comment

0 Comments