Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

T-20 அணித் தலைவர் பதவியில் இருந்து மஹேல விலகல்!...

சர்வதேச இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி அணித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக இலங்கை அணித் தலைவர் மஹேல ஜயவர்த்தன அறிவித்துள்ளார்.

இது குறித்து இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவுக்கு தான் ஏற்கனவே அறிவித்துவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.

எனினும் தான் முன்னர் குறிப்பிட்டது போன்று சர்வதேச ஒருநாள் மற்றும் ரெஸ்ட் போட்டிகளுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம்வரை தலைமை தாங்கவுள்ளதாக மஹேல கூறியுள்ளார்.



இளம் வீரர்களுக்கு தலைமைத்துவம் அளிக்கும் நோக்கில் தான் இந்த முடிவை எடுத்ததாக அவர் குறிப்பிட்டார்.

இருபதுக்கு இருபது உலகக் கிண்ணத்தை மேற்கிந்திய தீவுகள் அணியிடம் தாரைவார்த்துக் கொடுத்ததன் பின் ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே மஹேல ஜயவர்த்தன இவ்வாறு தெரிவித்தார்.

Post a Comment

0 Comments