Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

ரிஷானா நபீக் விடுதலை தொடர்பில்...

சவுதி அரேபியாவில் பணிபுரிந்த பணிப்பெண்ணான திருகோணமலை மூதூரைச் சேர்ந்த ரிஷானா நபீக்கின் விடுதலை தொடர்பில் இலங்கையின் சட்டமா அதிபர் சவுதி அரேபியாவுக்கு செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விடயம் தொடர்பில் இலங்கையின் சட்டமா அதிபர் தமது நாட்டுக்கு வந்து சட்ட ஒழுங்குகள் தொடர்பில் கலந்துரையாட வேண்டும் என்று, சவுதி அரசாங்கம் எதிர்பார்ப்பதாக
ஏசியன் ட்ரியூபின் தெரிவித்துள்ளது.
குவைட்டில் இடம்பெற்ற மாநாட்டில் பங்கேற்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, சவுதி இளவரசர் சல்மான் பின் அப்துல் அசிஸ் அல் சவூட்டை சந்தித்த போது இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக ஏசியன் ட்ரியூபின் தெரிவித்துள்ளது.-சூரியன் செய்தி

Post a Comment

0 Comments