மருத்துவ நிபுணர்களின் அறிவுறுத்தல்களுக்கு அமையவே கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி அளிக்கப்படும் என ராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
சுகாதார அமைச்சின் நிபுணர்கள் குழுவின் பரிந்துரைக்கு அமையவே, கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்வது தொடர்பிலான தீர்மானம் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோவிட்டினால் உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாசாக்களை நல்லடக்கம் செய்ய பிரதமர் மஹிந்த ராஜபக்ச அனுமதி வழங்கியதாக நேற்றைய தினம் ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments