உடுநுவர,தெள்ளங்க அஸ்-சிராஜ் ஆண்கள் பாடசாலையில் கடந்த 2015,2016,2017 ஆண்டுகளில் கல்வி துறையில் மற்றும் விளையாட்டு துறைகளில் சிறந்த சித்தியை பெற்ற மாணவர்களை பாராட்டி பரிசில்கள் வழங்கிவைக்கும் விசேட நிகழ்வு 30)நேற்று நடைபெற்றது.
நிகழ்வு பாடசாலை அதிபர் மௌலவிய ஏ.எம்.எஸ் நசீமா அவர்களின் தலைமையில் அஸ்-ஸிராஜ் பாடசாலை கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் விசேட அதிதியாக மாகாண சபை உறுப்பினர் அல்ஹாஜ் ஹிதாயத் சத்தார்,உடுநுவர பிரதேச சபை தலைவர் காமினி தென்னகோன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் அல்ஹாஜ் அரூஸ் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
நிகழ்வின் இறுதியாக பாடசாலையில் அனைத்து துறைகளிலும் சிறந்த சித்தியைப்பெற்று சாதனைப்படைத்துள்ள நான்கு மாணவர்களுக்கான
எம்.எப்.ஏ ஹசன்
ஆர்.எம் ஷியாம்
எம்.ஐ.எம் இஷாக்
எம்.ஐ அஹமட் ஆகியோர்க்கு இதன்போது விசேட "வர்ண விருது" வழங்கி கௌரவிக்கப்பட்டன.
குறித்த நிகழ்வுக்கான முழு அனுசரணையும் "ஏசியன் குரூப் நிறுவனத்தின்" உரிமையாளர் அல்ஹாஜ் ஹாஜா உசைன் அவர்கள் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments