Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

சிங்கள, பௌத்த சித்தாந்தங்களுக்கு ஏற்பவே ஆட்சி நடத்துவேன்-ஜனாதிபதி கோட்டாபயவின் சுதந்திரதின உரை


நான் சிங்கள, பௌத்த தலைவன். பெளத்த சித்தார்ந்தங்களுக்கு அமையவே நாட்டை ஆள்வேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எனினும் அனைத்து இனங்கள் மற்றும் மதங்களுக்கு உரிய கௌரவம் வழங்கப்படும் என இன்று ஆற்றிய சுதந்திர தின உரையில் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்து விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவினால் சமர்பிக்கப்பட்ட அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு தான் சட்ட மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, தான் சிங்கள பெளத்தன் என்ற ரீதியில், பெளத்த சித்தார்ந்தங்களுக்கு அமையவே நாட்டை ஆட்சி செய்வேன். எனினும், நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் சமவுரிமை உள்ளதாக ஜனாதிபதி இன்றைய சுதந்திரதின உரையில் குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments