Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

இலங்கையை வந்தடைந்தார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்


பாக்கிஸ்தான் பிரதமர் வருகைதரும் பிரத்தியேக விமானம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அழைப்பின் பேரில் பாகிஸ்தான் பிரதமரின் குறித்த விஜயம் அமைந்துள்ளது.

நாட்டை வந்தடைந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை, பிரதமர் மஹிந்த ராஜபக்ச விமான நிலையத்தில் வைத்து வரவேற்றதோடு செங்கம்பள வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.

இதன்போது, பிரதமரோடு நீதி அமைச்சர் அலி சப்ரி உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும், இன்றையதினம் அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவோடு விசேட சந்திப்புக்களை பாகிஸ்தான் பிரதமர் மேற்கொள்ள உள்ளார்.

இந்த நிலையில் பல்வேறு உயர்மட்ட சந்திப்புக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments