கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யவேண்டுமென்ற தனது தனிப்பட்ட விருப்பத்தையே பிரதமர் வெளிப்படுத்தினார் என அமைச்சரவை பேச்சாளர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்ப குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அகற்றுவது குறித்த இறுதி முடிவெடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வது குறித்த தனது தனிப்பட்ட விருப்பத்தினையே பிரதமர் வெளிப்படுத்தினார் என தெரிவித்துள்ள உதயகம்மன்பில எனினும் இது ஏற்கனவே காணப்படும் நடைமுறைகளை மாற்றாது என குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார சேவைகள் பணிப்பாளரின் முடிவில் மூன்றாம் நபர்கள் அல்லது அரசியல்வாதிகள் தலையிடமுடியாது என குறிப்பிட்டுள்ள அமைச்சர் புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியாகும் வரை தற்போது காணப்படும் நடைமுறை தொடர்ந்தும் பின்பற்றப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
0 Comments