கோவிட் - 19 தொற்றுநோயில் இருந்து தமது சமூகம் பாதுகாக்கப்படவேண்டும் என்று வேடுவர் தலைவர் வனஸ்பதி ஊருவரிகே வன்னிலா எத்தோ கோரிக்கை விடுத்துள்ளார்.
பதுளை மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான கோவிட் -19 தொற்றாளிகள் கணடறியப்படுகின்றனர்.
ரிதிமாலியத்த பகுதியிலிருந்து 173 நோயாளிகளும், மஹியங்கனை - திஸ்ஸபுர, கெமுனுபுர உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து சுமார் 200 நோயாளிகளும் பதிவாகியுள்ளனர்.
கந்தேகெட்டிய மற்றும் பதுளை பகுதிகளிலும் இந்த வைரஸ் நோய் பரவி வருகிறது.
எனினும் அரசியல்வாதிகள், சுகாதார அதிகாரிகள் அல்லது பாதுகாப்புப் படையினர் இந்த நிலைமை குறித்து எந்த கவனமும் செலுத்தவில்லை என்று அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
0 Comments