Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

விபத்துகளில் நேற்று மாத்திரம் 12 பேர்கள் உயிரிழப்பு!


நாட்டில் பல பகுதிகளிலும் அண்மையில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று செவ்வாயன்று மாத்திரம் 12 பேர் உயிரிழந்துள்ளனர். 

ஒரே நாளில் இவ்வாறு பத்திற்கும் அதிகமானோர் விபத்துகளால் உயிரிழப்பது கவலைக்குரிய விடயமாகும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் றோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

11 விபத்துக்களில் இவ்வாறு 12 பேர் உயிரிழந்துள்ளனர். இவற்றில் செவ்வாயன்று மாத்திரம் 6 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. எஞ்சிய விபத்துக்களில் ஐந்து முன்னர் இடம்பெற்றவையாகும். ஏனையவை மோட்டர் சைக்கிள் விபத்தொன்றில் அதில் பயணித்த இருவரும் உயிரிழந்துள்ளனர்.

ஒரே நாளில் 10 - 12 பேர் வாகன விபத்துக்களால் உயிரிழப்பது கவலைக்குரியதாகும். எனவே வாகன விபத்துக்களை கட்டுப்படுத்த அனைவரதும் ஒத்துழைப்பும் இன்றியமையாததாகும். செவ்வாயன்று பதிவான 12 மரணங்களில்  மோட்டர் சைக்கிளில் சென்ற 8 பேர், இரு பாதசாரிகள் மற்றும் பயணிகள் இருவர் உள்ளடங்குகின்றனர்.

-vrk-pst-

Post a Comment

0 Comments