இந்த கலந்துரையாடலில் ஐந்து முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன, புதிய கிரிக்கெட்
தேர்வுக் குழுவை நியமிப்பது குறிப்பிடத்தக்க தீர்மானம் என கூறப்படுகிறது..இந்த கலந்துரையாடலில் விளையாட்டு அமைச்சர் நமல் ராஜபக்ஷ, தேசிய விளையாட்டு கவுன்சில் தலைவர் மகேலா ஜெயவர்தன, இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
உள்ளூர் மற்றும் மாகாண போட்டிகளை மேம்படுத்தல், வீரர்களின் ஒழுக்கம் மற்றும் உடற்தகுதிக்கு முன்னுரிமை அளித்தல்,விளையாட்டு வீரர்களுக்கு திறமை அடிப்படையிலான ஒப்பந்தங்களை வழங்குதல் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளருக்கு உதவ ஒரு இயக்குனர் மற்றும் ஆலோசகரை நியமித்தல் ஆகியவை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
0 Comments