பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இதுவரை ஒரு லட்சத்து இருபதாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது.
கொரோனாவின் முதல் அலை காரணமாக, இறப்புகள் கடுமையாக உயர்ந்திருந்த நிலையில், தற்போதைய நிலை குறித்து வெளியாகியுள்ளது.
முதல் அலை காரணமாக கடந்த ஆண்டு மே 23-ஆம் திகதிக்குள் மொத்தம் 50,000 பேர் கொரோனாவால் உயிரிழந்துவிட்டனர்.
அதன் பின் கொண்டுவரப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகளை தொடர்ந்து, நவம்பர் 26-ஆம் திகதிப் படி கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 75,000-ஐ கடந்தது.
இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் 7-ஆம் திகதி இதன் எண்ணிக்கை 100,000-ஐ எட்டியது.
இந்த ஆண்டு ஜனவரி 15-ஆம் திகதி வரை குறைந்தது 13,876 பேர் கொரோனா வைரஸால் இறந்துள்ளதாக ஓஎன்எஸ் தரவு கூறுகிறது.
இதன் மூலம் நாள் ஒன்றிற்கு சராசரியாக 900-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
லண்டன் யுனிவர்சிட்டி கல்லூரியில் imaging neuroscience பேராசிரியரான கார்ல் பிரிஸ்டன், இரண்டாவது அலையில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை முதல் காலத்தில் காணப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கும்.
இறப்பு விகிதம் குறையும் விகிதம் மெதுவாகவும் ஏற்ற இறக்கமாகவும் இருக்கும் என்று கூறியுள்ளார்.
தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தற்போது பரவி வரும் கொரோனா, முதல் அலையின் உச்ச இறப்பு விகிதங்களை எட்டாவிட்டாலும், இது மிகவும் நீடித்த மற்றும் ஆபத்தானதாக இருக்கக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
-lks-
0 Comments