சிரச தொலைக்காட்சியில் சிங்கள மொழி மூலம் ஔிபரப்பாகும் லக்ஷபதி நிகழ்ச்சியில் 17 வயதுடைய பாடசாலை மாணவி ஷூக்ரா முனவ்வர் இறுதிச் சுற்றில் 2 மில்லியன் ரூபாவைவெற்றி கொண்டு சாதனை நிகழ்த்தியுள்ளார்.
இவர் காலி மாவட்டத்தின் கட்டுகொட பகுதியை சேர்ந்தவராவார்.
இவ்விசேட போட்டி நிகழ்வின் நான்காவது சாதனையாளராக முதல் முஸ்லிம் மாணவி ஷுக்ரா முனவ்வர் இன்று பெயர் பதித்துள்ளார்.
இதற்கு முன்னதாக, இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 2014 ஆம் ஆண்டில் அபேக்ஷா குமாரியும் 2017 ஆம் ஆண்டில் மோக்ஷ மதுஷங்கவும் 2019 ஆம் ஆண்டில் ஹன்சினி காவிந்தியும் 2 மில்லியன் ரூபாவை வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த மாணவியின் எதிர்காலத்தில் கல்வித்துறை மெம்மேலும் சாதனைகளை பெற எமது Fastnews1stமுதல்வேகச்செய்தி ஊடக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்!.
0 Comments