Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

புலமைப்பரிசில் பரிட்சையில் அம்மார் உட்பட பத்து மாணவர்கள் அதிக புள்ளிகளை பெற்று சாதனை!.

2020 ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் மொஹமட் அம்மார் உட்பட பத்து மாணவர்கள் அதிக புள்ளிகளை பெற்று சாதனை நிகழ்த்தியுள்ளனர்.

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர்

மாதம் 11 ஆம் திகதி இடம்பெற்ற நிலலையில் அதன் பெறுபேறுகள் நேற்று வெளியிடப்பட்டது.

அதன்படி, 200 புள்ளிகள் என்ற முழுமையான மதிப்பெண்களைப் கொழும்பு சாஹிரா கல்லூரி மாணவன் மொஹமட் அம்மார் உட்பட பத்து மாணவர்கள் பெற்றுள்ளதாக பரீட்சை திணைக்களம் தரவுகள் தெரிவிக்கிறது.

அதன்படி அதிக மதிப்பெண்களை பெற்று சாதனை நிகழ்த்திய மாணவர்களின் விபரம் பின்வருமாறு:

> எம். எப். முஹமட் அமர் - ஸாஹிரா கல்லூரி, மருதானை

> ஏ.எச். சிஹாத் சந்தினு - தர்மபாலா வித்தியாலயம் அரவல

> தேவுலி யசஸ்மி திலகரத்ன - ஸ்ரீ சுமனஜோதி ஆரம்ப கல்லூரி, இங்கிரிய

> எம்..டி.எச் சஸ்மித்தா குணதிலக - பண்டாரகம மத்திய கல்லூரி, களுத்துறை

> எஸ்.டி. சியாதி விதும்சா - சங்கமித்தா பாலிக்கா வித்தியாலயம், காலி

> டபிள்யூ.ஏ தசிந்து அவிஷான் - தங்காலை ஆண்கள் பாடசாலை, கதுருபொத்த

> பி.கே. டோவிந்து சிரஞ்சித் - ஜனாதிபதி கல்லூரி, எம்பிலிப்பிட்டிய

> எச்.எம்.செனுதி தம்சரா - எஹெலியகொடை ஆரம்பக் கல்லூரி

> எச்.எம். தேனுஜா மனுமிதா பண்டார - சிரிபுர ஆரம்பக் கல்லூரி, பொலன்னறுவை

> யெஹார யெத்மினி எபா - பெண்கள் உயர்நிலைப் பாடசாலை, கண்டி

கொரோனாவின் இக்கட்டான சூழ்நிலைக்கு மத்தியில் இப்பரீட்சைக்கு முகம் கொடுத்து சித்திபெற்ற இம் மாணவர்களுக்கும் மற்றும் தோல்விகளை சந்தித்த நம் சிட்டுக்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்!

-Fastnews1stமுதல்வேகச்செய்தி-

Post a Comment

0 Comments