2019 ஆம் ஆண்டுக்கான அகில இலங்கை தேசியரீதியில் இடம்பெற்ற இரண்டாவது தேசிய "முஅய்"தாய் சம்பியன்ஷிப் குத்துசண்டை அரை இறுதி சுற்றுப்போட்டியில் ஐ.எம்.ஏ(IMA)அணியின் வீரரான கெலிஓய முஹம்மத் அலி இரண்டாம் இடத்தைப்பெற்று வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்துக் கொண்டுள்ளான்.
இவ் விசேட தேசிய குத்துசண்டை அரை இறுதி சுற்றுப்போட்டி அகில இலங்கை தேசிய"முஅய்"தாய் சம்பியன்ஷிப் சங்கத்தின் தலைவர் அசோகா ஜயரத்ன அவர்களின் தலைமையில் கடந்த ஜூன் மாதம் 8,9ம் திகதிகளில் கண்டி,திகன விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றுள்ளது.
நிகழ்வின் விசேட அதிதியாக அமைச்சர் நவீன் திசாநாயக்க மற்றும் ரோஹன் பல்லேவத்த ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
18 முதல் 41 வயதெல்லைக்கு உற்பட்டோருக்கான 71kg நிறையினர்க்கு இடையே இடம்பெற்ற குத்துசண்டை அரை இறுதி போட்டியில்
எல்.பி( LION POWER ) அணியை சேந்த வீரர் I.M.I.U.B இளங்ககோன்'க்கு எதிராக, நாவலபிட்டிய (Iron Martial Arts Association )ஐ.எம்.ஏ அணியின் வீரரான கெலிஓய,தொமகொள்ள பகுதியை சேர்ந்த M.A முஹம்மத் அலி என்ற இளைஞன் களமிறங்கி சிறந்த முறையில் விளையாடி அகில இலங்கை தேசிய "முஅய்"தாய் சம்பியன்ஷிப் குத்துசண்டை அரை இறுதி போட்டியில் இரண்டாம் இடத்தைப்பெற்று வெள்ளிப் பதக்கத்தை வெற்றிகொண்டுள்ளான்.
மேலும் முஹம்மத் அலி இன் விசேட பயிற்றுவிப்பாளரான எம்.பாஹித் அவர்களின் கீழ் இயங்கும் இவ் ஐ.எம்.ஏ(IMA) அணி கடந்த மார்ச் மாதம் நாவலபிட்டியவில் இடம்பெற்ற தேசிய "முஅய்"தாய் சம்பியன்ஷிப் குத்துசண்டை தேர்வு சுற்றுப்போட்டியில் 40 போட்டிகளுக்குமேல் வெற்றிகொண்டு தேசிய சம்பியன்ஷிப் அரை இறுதி போட்டிகளுக்கு தெரிவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நிகழ்வுக்கு தாய்லாந்து நாட்டை சேர்ந்த டாக்டர். அஜான் சலோ (க்ராண்ட் மாஸ்டர்)விசேட அதிதியாக கலந்து சிறப்பித்துள்ளார்.
மொஹமட் அலிக்கு எமது Fastnews1stமுதல்வேகச்செய்தி சார்பாக பாராட்டுகளையும்,வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்!.
0 Comments