நாடு பூராகவும் மேற்கொள்ளப்படுகின்ற சோதனை நடவடிக்கையின் போது மீட்கப்படுகின்ற வாள்கள் உட்பட ஆயுதங்கள் தொடர்பான காணொளிகளை ஊடகங்களில் ஒளிபரப்ப வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக களுவெவ சகல ஊடக நிறுவனங்களுக்கும் இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.
சகல ஊடக நிறுவனங்களினதும் பிரதானிகளை இன்று காலை அரச தகவல் திணைக்களத்திற்கு அழைத்து இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.
0 Comments