Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

தீவிரவாதிகளின் பிரதான இடத்தை காட்டிக்கொடுக்க உதவிய மூன்று பேர்களுக்கும் பணப்பரிசு!..


ஐ.எஸ் பயங்கரவாதிகளின் இருப்பிடத்தை காட்டிக் கொடுத்த இஸ்லாமிய மக்களுக்கு பொலிஸார் பணப்பரிசு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

கடந்த 25ம் திகதி கல்முனை - சாய்ந்தமருது பகுதியில் பதுங்கியிருந்த ஐ.எஸ் பயங்கரவாதிகளின் இருப்பிடத்தை அதிரடிபடையினர் முற்றுகையிட்டு அழித்திருந்தனர்.

அந்தப் பகுதியை சேர்ந்த மூன்று இஸ்லாமியர்கள் இது தொடர்பான தகவல்களை பொலிஸாருக்கு வழங்கியிருந்தனர்.

தகவல் அளித்த மூன்று இஸ்லாமியர்களுக்கும் தலா 10 இலட்சம் ரூபாய் பணப்பரிசு வழங்க பொலிஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளது.

அத்துடன் குறித்த சந்தர்ப்பத்தில் உடனடியாக செயற்பட்ட மூன்று பொலிஸ் அதிகாரிகளுக்கும் தலா 5 இலட்சம் ரூபாய் பணப்பரிசு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அன்றையதினம் அதிரடி படையினர் மேற்கொண்ட சிறப்பு முற்றுகையின் போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் தற்கொலை தாக்குதல் நடத்தியிருந்தனர். இதன்போது தற்கொலைதாரிகள் உட்பட குடும்ப உறுப்பினர்கள் 15 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

இதில் தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரானின் குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்பட்டிருந்தனர். எனினும் சஹ்ரானின் மனைவியும் மகளும் உயிருடன் பிடிபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments