Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

உடுநுவர பிரதேச சபை UNP வசம்;உதவித் தவிசாளராக சப்fபான் ஹாஜி தெரிவு(நேர்காணல்)

உடுநுவர பிரதேச சபையின் உதவித் தவிசாளராக ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் அல்ஹாஜ் சப்fபான் அவர்கள் அதிக வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

நடந்து முடிந்த 2018ஆம் ஆண்டு உள்ளூராட்சிமன்ற தேர்தலில் உடுநுவர பிரதேச சபைக்கான தவிசாளரும், உதவித் தவிசாளரும் தெரிவுசெய்யும் வாக்கெடுப்பு நேற்று இடம்பெற்றது.

இவ்  வாக்கெடுப்பு நேற்று கெலிஓய உடுநுவர பிரதேச சபை முதல் அமர்வின் போது இடம்பெற்றது.

வாக்கெடுப்பின் போது தவிசாளர் பதவிக்கு போட்டியிட்ட பொதுஜன பெரமுன கட்சின் உறுப்பினர் யூ.பி விஜேகோன் அவர்களுக்கு 18 வாக்குகளும்,ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் காமினி தென்னகோன் அவர்கள் 20 வாக்குகளையும் பெற்று சபையின் தவிசாளராக காமினி தென்னகோன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

மேலும் உதவித் தவிசாளர்க்கான வாக்கெடுப்பில் சுதந்திர கட்சியின் உறுப்பினர் பந்துல செனவிரத்ன அவர்களுக்கு 16 வாக்குகளும்,ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் அல்ஹஜ் சப்பான் அவர்கள் 22 வாக்குகளையும் பெற்று உதவித் தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இதில் இம்முறை பிரதேச சபைக்கு தெரிவுசெய்யப்பட்ட  39 உறுப்பினர்களில் நேற்றைய தினம் 38 உறுப்பினர்கள் வாக்களித்துள்ளதோடு,இதில் அதிக வாக்குகளை சப்பான் ஹாஜியாரே பெற்றுக்கொண்டுள்ளார்.

மேலும் எனக்கு கிடைக்கப்பெற்ற 18 வாக்குகள் பொதுஜன பெறமுண கட்சி உறுப்பினர்களின் வாக்குகள் எனவும் ஏனைய நான்கு வாக்குகளும் தமது கட்சியால் கிடைக்கப்பெற்றது என பிரதேச சபை உதவி தவிசாளர் சப்பான் அவர்கள் முதல்வேகச்செய்தி Fastnews1st'கு  தெரிவித்தார்.

இந்த வெற்றி எனக்கு பெருமைக்கு கிடைத்த வெற்றியல்ல,இது எமது சமூகத்துக்கு கிடைக்கப்பெற்ற பெரும் வெற்றி எனவும் இதுக்காக நான் இனபேதம் இன்றி அனைவருக்கும் சேவையாற்றுவேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

வெற்றியை அடுத்து முதல்வேகச்செய்தி Fastnews1st'கு சப்பான் ஹாஜியார் வழங்கிய நேர்காணலின் தொகுப்பு..

Post a Comment

0 Comments