Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

உடுநுவர UDT'யின் அன்-நூர் கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுகள்(காணொளி)

உடுநுவர அபிவிருத்தி நிதியத்தினால் விசேட தேவையுடை மாணவர்களுக்கான சமூக சேவைகள் திட்டத்தின் கீழ் அன்நூர் பாடசாலை ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் விசேட நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

இவ் விசேட அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று காலை ஓபல்லே,உடுநுவர அபிவிருத்தி நிதிய வளாகத்தில் இடம்பெற்றது.

நிகழ்வின் விசேட அதிதிகளாக "Quick Pack" உரிமையாளர் அல்ஹாஜ்  எம்.எச்.எம் அஜ்மல்,அன்-நூர் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் சிராஜுதீன்,அன்-னூர் அமைப்பின் செயலாளர் மொஹம்மத் ஆஷிக்,அஷ்ஷெய்க் அன்வர் மற்றும் இன்னும் பல பிரமுகர்கள் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.

மேலும் இவ் விசேட வேலைத்திட்டத்தின் பணிகளுக்காக சுமார் இரண்டரை கோடி   ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது.

குறித்த கட்டிடத்துக்கான முதலாவதாக அல்ஹாஜ்.அஜ்மல் அவர்களால் அடிக்கல் நாட்டிவைப்பதை காணொளி தொகுப்பில் காணலாம்.

Post a Comment

0 Comments