Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

சி.வி கொஸ்லந்தை விஜயம்


வடமாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் கொஸ்லந்தை, மீரியபெத்த மண்சரிவுக்குள்ளான இடங்களுக்கு இன்று விஜயம் செய்தார்.அத்துடன், அங்கு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள, பாதிக்கப்பட்ட மக்களையும் அவர் சந்தித்தார்..குறுகிய அரசியல் நோக்குடன் செயற்படுவதனை
அரசியல்வாதிகள் தவிர்த்துக்கொள்ள வேண்டுமென அவர் அங்கு தெரிவித்ததோடு, சுயலாப அடிப்படையில் செயற்படாது மண்சரிவு எச்சரிக்கை தொடர்பில்

முன்கூட்டியே அரசியல்வாதிகள் கவனம் செலுத்தியிருந்தால் இந்த நிலைமையை தவிர்த்திருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.இந்த துயர் மிகுந்த தருணத்தில் வடக்கிற்கும் மலையகத்திற்கும் இடையில் புதிய பிணைப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கத் தயார் எனவும், பாதிக்கப்பட்ட சிறுவர் சிறுமியருக்கு அடைக்கலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட முடியும் எனவும், உதவிகள் கோரப்பட்டால் தேவையான உதவிகளை வழங்க வட மாகாணசபை நடவடிக்கை எடுக்கும் எனவும் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.(ரி)

Post a Comment

0 Comments