Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாகிஸ்தான் நிவாரணம்

கொஸ்லாந்தை மண்சரிவு அனர்த்தத்துக்கு உட்பட்டோருக்கான நிவாரணப் பொருட்களை ஏந்திய பாகிஸ்தானின் முதல் கொள்கல விமானம் இன்று கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்தது.
பாகிஸ்தானில் இருந்து 100 மில்லியன் ரூபா பெறுமதியான நிவாரணப் பொருட்களை எடுத்து வந்த மேற்படி விமானத்துக்குப் புறம்பாக, பாகிஸ்தான் நாளைய தினமும் நிவாரணப்
பொருட்களோடு தனது இர்ண்டாவது விமானத்தை இலங்கைக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஜெனரேட்டர்கள், பிளாஸ்ரிக் கொட்டகைகள், புகலிட துணிகள், மருந்துப் பொருட்கள், உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களையே பாகிஸ்தான் இவ்விமானத்தில் இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், கடந்த 31ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவைத் தொடர்பு கொண்டு உதவி செய்யக் காத்திருப்பதாக வழங்கிய உறுதி மொழியின் பிரகாரமே இந் நிவாரணப் பொருட்கள் இங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இராணுவத் தளபதி தயா ரத்நாயக்கவை தொலைபேசியில் தொடர்பு கொண்டிருந்த பாகிஸ்தான் இராணுவத் தளபதி ராஹில் ஷெரீபும், தாம் வேண்டிய உதவிகளை இலங்கைக்கு வழங்குவதற்கு தயாராக இருப்பதாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆசியப் பிராந்திய நட்பு நாடு என்கிற அடிப்படையில், இவ்வனர்த்தம் தொடர்பில் பாகிஸ்தானே முதல்  மனித நேய நிவாரண உதவியைச் செய்திருக்கிறது என்பதும் சுட்டப்பட வேண்டியதே.

Post a Comment

0 Comments