Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

கம்பளை கோணடிக்காவில் மண்சரிவு அபாயம் 58 பேர் தஞ்சம்

கம்பளை கோணடிக்கா தோட்ட லயக்குடியிருப்பு பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதினையடுத்து அப்பகுதி மக்கள் தோட்ட ஆலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த லயக்குடியிருப்பு பிரதேசத்தில் கடந்த இருவருடங்களுக்கு முன்னர் மண்சரிவு அபாயம் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்திருந்த பொழுதும் தோட்ட நிர்வாகம்
மாற்றிடம் வழங்காமையால் மீண்டும் அங்கு வசித்து வந்த நிலையில் இன்று மீண்டும் இடம்பெயர்ந்துள்ளனர்.தற்போது 58 பேர் ஆலயத்தில் தஞ்சமடைந்துள்ளனர். 
இதேவேளை, கம்பளை அட்டபாகை தோட்டத்திலும் லயக் குடியிருப்பில் ஏற்பட்ட பாரிய வெடிப்புக்களையடுத்து அங்கு வசித்த 14 குடும்பங்களைச் சேர்ந்த 17 சிறுவர்கள் உட்பட 63 பேர் அட்டபாகை தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன் நிவ்பீகொக் தோட்டத்தில் 120 பேர் நியூபீகொக் தமிழ் வித்தியாலயத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments