Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

தமிழர்களுக்கு முழுமையான அதிகாரம் கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை: ராஜித

தேசிய ஐக்கியத்திற்காக வடக்கில் உள்ள தமிழ் மக்களுக்கு தேவையான முழுமையான அதிகாரம் கிடைக்கும் வரை தான் அந்த போராட்டத்தை கைவிடப் போவதில்லை என  அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.முல்லைத்தீவு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற தேர்தல்
பிரசாரங்களில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சிங்கள மற்றும் தமிழ் இனவாத தலைவர்களே இனவாதத்தையும் தேசிய வாதத்தையும் தூண்டி நாட்டை யுத்தம் ஒன்றை நோக்கி தள்ளி விட்டனர்.  30 வருட போரில் தமிழர்களும், சிங்களவர்களும் கடும் பாதிப்புகளை அனுபவித்தனர்.  சிங்கள இனவாத தலைவர்கள் தெற்கில் சிங்கள இனவாததத்தை போஷித்து வாக்குகளை பெறுவது போன்று,  வடக்கிலும் இடம்பெற்றது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment

0 Comments