Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

கட்டுநாயக்க துறைமுகம் ஊடாகவே போதைவஸ்து நாட்டுக்குள் ஊடுருவல்: எரான் எம்.பி


கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாகவோ அல்லது இலங்கைத் துறைமுகத்தினூடாகவோ அன்றி வேறு எந்த வழியாகவும் போதைவஸ்துகள் நாட்டுக்குள் கொண்டு வந்து விட முடியாது. எனவே இதன் பின்னணியில் இருக்கின்ற சூத்திரதாரியை அரசாங்கம் கண்டறிந்து வெளிப்படுத்த வேண்டும். போதைவஸ்துக்களால் இளைஞர் சமுதாயத்தை விற்று
சீரழித்து பொருளாதாரத்தை கட்டியெழுப்பி விட முடியாது என்று ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி. எரான் விக்கிரமரட்ண சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று அமர்வின்போது இடம்பெற்ற செயல் நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழான கட்டளை மற்றும் இறக்குமதிகள் ஏற்றுமதிகள் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் ஒழுங்கு விதிகள் ஆகியவற்றின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

எரான் எம்.பி. இங்கு மேலும் கூறுகையில்,
அண்மையில் எத்தனோல் என்ற போதைப் பொருள் இலங்கைக்குள் கொண்டு வரப்பட்டிருந்தது. இந்நாட்டின் முக்கிய புள்ளியொருவருக்காக இது கொண்டு வரப்பட்டிருந்தது.
அதேபோன்று தான் தற்போது பாரிய தொகை போதைவஸ்தும் கொண்டு வரப்பட்டிருக்கின்றது. மேற்படி போதைப் பொருளானது கொழும்பில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்ற போதிலும் அது குருணாகல் மாவட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
போதைப் பொருட்கள் நாட்டுக்குள் கொண்டு வரப்படுவதென்றால் அது கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாகவோ அல்லது இலங்கைத் துறைமுகத்தினூடாகவோ மாத்திரமே முடியும். மாறாக படகுகளில் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்று கூறினால் அதனை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்றார்

Post a Comment

0 Comments